திருப்பதி, ஜூன் 7: திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரப் பிரதேசம் மாநிலம், திருப்பதி அருகே குருவராயபள்ளி என்ற இடத்தில் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. சாலையின் வழியில் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கவனிக்காததால் அதன்மீது கார் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான அனைவரும் குண்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான இந்த காரில் பயணம் செய்த மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.