சென்னை, ஜூன் 7: கோவையில் கொலைசெய்துவிட்டு சென்னையில் பதுங்கியிருந்த கொலையாளியை போலீசார் இன்று காலை கைது செய்து, கோவை போலீசில் ஒப்படைத்தனர்.  சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் எஸ்.ஐ கவியரசு, காவலர் சரவணன் ஆகியோர் திருவல்லிக்கேணி பகுதியில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போத, இன்று அதிகாலை 3 மணியளவில் ஆடம்ஸ் ரோடு, திருவல்லிக்கேணியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, போலீஸ் வாகனத்தை கண்டதும் ஒருவர் தப்பியோடியுள்ளார் அவரை பிடித்து சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது,  விருதுநகர் கட்டனூர் என்ற கிராமத்தை சில்பான் அலாவுதீன் (வயது 21) என்பதும், கடந்த 17-ம் தேதி கோவையில் விஜயகுமார் என்பரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்ததது.

இதனையடுத்து, அலாவுதீனை பிடித்த போலீசார், அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் கோவை வெரைட்டிஹால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், கோவை போலீசார் சென்னைக்கு வந்தனர்.  இதனையடுத்து, திருவல்லிக்கேணி போலீசாரின் காவலில் வைக்கப்பட்டிருந்த அலாவுதின், கோவை போலீசாரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டார்.