பிரிஸ்டல், ஜூன் 7: மழைக்காரணமாக பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் தொடங்குவதில் தாமதமாகிவருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கணிக்கமுடியாத அணியாக கருதப்படும் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுவதாக இருந்தது. மதியம் 3 மணிக்கு பிரிஸ்டல் மைதானத்தில் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மழைக்காரணமாக டாஸ் கூட போடமுடியாமல் தள்ளிப்போயுள்ளது. மழை நின்றபிறகே, ஆட்டம் தொடங்கப்பட்டாலும் பாதி ஓவராக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது மழை தொடர்ந்தால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் சமபுள்ளிகள் பிரித்து வழங்கப்படும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்டல் மைதானத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக உள்ளூர் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.