பிரிஸ்டல், ஜூன் 8: தொடர் மழைக்காரணமாக பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதவிருந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் கணிக்கமுடியாத அணியாக கருதப்படும் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் நேற்று மோதுவதாக இருந்தது. மதியம் 3 மணிக்கு பிரிஸ்டல் மைதானத்தில் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மழைக்காரணமாக டாஸ் கூட போடமுடியாமல் தள்ளிப்போனது. ஆனால், 3-4 மணிநேரங்கள் மழை விடாது பெய்துள்ளது. மழை நின்றபிறகு, ஆட்டம் தொடங்கப்பட்டாலும் பாதி ஓவராக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மழை நின்றபிறகும் பிட்ச்சில்(ஆடுகளம்) ஈரப்பதம் இருந்ததாலும், நேரம் அதிகமாக கடந்துவிட்டதன் காரணத்தையும் கருத்தில் கொண்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பிரித்துவழங்கப்பட்டது.

அதேசமயம், போட்டியை காணவந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
பிரிஸ்டல் மைதானத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்யக்கூடும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது, கவனிக்கத்தக்கது.