லண்டன், ஜூன் 8: நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன் இந்தியா மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி லண்டனில் நாளை நடக்கவுள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆட்டம் தொடங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை சந்தித்த இருபோட்டிகளுமே வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

தனது முதல்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு நாளைய போட்டி 2-வது ஆட்டமாகும். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய அனுபவத்துடன் நாளைய போட்டியிலும் களம்கண்டு வெற்றி வாகைச்சூட வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவல்.