போர்ப்ஸ் அமெரிக்க கோடீஸ்வரிகள் பட்டியலில் இடம்பெற்ற 3 இந்திய பெண்கள்

TOP-4 உலகம்

நியூயார்க், ஜூன் 8: போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அமெரிக்காவின் கோடீஸ்வரிகளின் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகை போர்ப்ஸ், அமெரிக்காவில் சுயமாக தொழில் செய்து கோடீஸ்வரியான பெண்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது வழக்கம்

அதே போல் இந்த ஆண்டிற்கான அமெரிக்க கோடீஸ்வரிகளின் 80 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

லண்டனில் பிறந்தவரும் இந்தியாவில் வளர்ந்தவருமான, ஜெய்ஸ்ரீ உல்லால் தனது 58-வது வயதில் 140 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளுடன் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார். இவர் அரிஸ்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார்.

சின்டல் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனரான நீர்ஜா சேதி (வயது 64) 100 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 23-வது இடத்தை பெற்றுள்ளார். இவர் வெறும் 2000 டாலர் முதலீட்டுடன் வீட்டிலேயே நிறுவனம் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

34 வயதான நேஹா நர்கெடே, 36 கோடி டாலர் சொத்துகளுடன் பட்டியலில் 60-வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் துணை நிறுவனராக உள்ளார்.