நியூயார்க், ஜூன் 8: சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க நாசா மையத்துக்கு ரூ.25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை வர்த்தக ரீதியில் சுற்றுலா மையம் ஆக்க அமெரிக்காவின் நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி ஆண்டுக்கு 2 தடவை சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட 2 தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டில் அனுப்பி வைக்கப்படுவர்.

சர்வதேச விண்வெளி ஆய்வகம் செல்வதற்கான சுற்றுலா அடுத்த (2020) ஆண்டு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.