விழுப்புரம், ஜூன்.8: விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் சங்கீதமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரம் அருகே குண்டலப்புலியூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றுவதற்காக இடமாறுதல் உத்தரவு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டது. அதன்படி மணிகண்டன், குண்டலப்புலியூர் டாஸ்மாக் கடையில் பணியாற்று வதற்காக சென்றார்.

அப்போது அங்குள்ள கடையின் மேற்பார்வையாளராக பணியாற்றி சாலாமேட்டை சேர்ந்த சரவணன் (வயது 48) இந்த கடையில் பணியில் சேர வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் எனக்கு லஞ்சமாக தர வேண்டும் என்று சரவணன் கூறியுள்ளார்.

இதையடுத்து மணிகண்டன் லஞ்சம் ஒழிப்புபோலீசாருக்கு தகவல் கொடுத்தார்.அவர்களின் ஆலோசனைபடி ரசாயன பொடி தடவிய பணத்தை மணிகண்டன் சரவணனிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கையும், களவுமாக பிடித்தனர்.