கோலியே ஆனாலும் குற்றம் குற்றமே: நகராட்சி கறார்

இந்தியா

குருகிராம், ஜூன் 8: கார்கள் கழுவ குடிநீரை பயன்படுத்தியதாக எழுந்த புகாரின்பேரில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு குருகிராம் நகராட்சி அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடிவருகிறது.
இந்த நிலையில், டெல்லி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள விராட் கோலியின் வீட்டில் அவரது உதவியாளர்கள், அவருக்கு சொந்தமான 6 கார்களை கழுவுவதற்கு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை பயன்படுத்தி வீணடித்திருப்பதாக, பக்கத்துவீட்டுக்காரர் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் விசாரணை நடத்திய குருகிராம் நகராட்சி அதிகாரிகள், புகார் உறுதியானதையடுத்து, விராட் கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.