திருவனந்தபுரம், ஜூன் 8: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் 4 மாவட்டங்களில் அதிக மழை இருக்குமென ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 48மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஒரு சில முறை செப்டம்பர் மாதத்தை தாண்டியும் தென்மேற்கு பருவ மழை நீடிக்கும். இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக பருவ மழை தொடங்கி உள்ளது.
தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திலும் ஓர் அளவு மழை பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போதுமான அளவு பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து விவசாயிகளும், பொதுமக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். வயநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில¢ தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளிலும் கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டம் மற்றும் பல பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் இன்று கூறுகையில், அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் குமரி கடல் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன¢கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெயிலின் தாக்கம் இன்னும் ஒரு வாரத்திற்குள் படிப்படியாக குறையும். கடந்த 24 மணி நேரத்தில் கீரனூரில் 6 செ.மீ, தர்மபுரியில் 4 செ.மீ மழை பெய்யுதுள்ளது.