சென்னை, ஜூன் 8: சேலம் மாவட்டத்தில் புதிய பாலம், மாணவர் விடுதி உள்ளிட்ட 17 திட்டப்பணிகளை நிறைவேற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். வாக்குறுதி படி அனைத்து பணிகளையும் செய்திருப்பதாக அவர் பெருமிதத்துடன¢கூறினார்.

கவுண்டம்பட்டி பகுதியில் நடைபெற்ற பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- இந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் தேர்தல் நேரத்தில், கவுண்டம்பட்டி-வெல்லாண்டிவலசை இணைக்கின்ற பாலம், கட்டிக் கொடுக்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையை ஏற்று, சரபங்கா நதியின் குறுக்கே ஒரு பாலம் கட்டி ஜெயலலிதா காலத்திலே திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது.

இப்பொழுது, மேலும் ஒரு புதிய பாலம் தேவை என்ற நைனாம்பட்டியில் இருக்கின்ற பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிட்டத்தட்ட ரூபாய் 1.90 கோடி மதிப்பீட்டில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்தப் பாலத்தை கட்டியதன் மூலம், நைனாம்பட்டியில் இருக்கக்கூடிய, அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய பொது மக்கள், பள்ளிக்குச் செல்கின்ற நம்முடைய மாணவச் செல்வங்கள் கிட்டத்தட்ட 1.50 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லக்கூடிய நிலையை மாற்றி, இப்பொழுது நேரடியாக, எளிதாக செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக அரசு தடையில்லாமல் 30 வார்டுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரித் தண்ணீரை கொடுக்கின்றது. நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்திலே புதிதாக திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. எடப்பாடி நகராட்சிக்கு அருகிலே பிரம்மாண்டமான மார்கெட் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் கான்கிரீட் சாலைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ, 34 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 அங்கன்வாடி கட்டடங்கள் என மொத்தம் ரூபாய் 5 கோடியே 87 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 17 புதிய பணிகளை இன்றையதினம் உங்கள் முன் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இவ்வாறு அவர¢ பேசினார்.