சென்னை, ஜூன் 8:  அமமுக விரைவில் அதிமுகவில் முழுமையாக இணையும் என்று அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அமமுக முழுமையாக அதிமுகவில் இணையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.