சென்னை, ஜூன் 8: இன்று சுமார¢1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதினர்.  தமிழகம் முழுவதும் இன்று சனிக்கிழமை (ஜூன் 8) ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுதுகின்றனர். 150 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வுக காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணிக்கு முடிவடைந்தது.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற முதல் தாள் தேர்வையும், 8-ஆம் வகுப்பு வரை பணியாற்ற இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 88 தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.

நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறவுள்ளன. இந்த தேர்வும் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணிக்கு முடிவடைகிறது. இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் எழுதுகின்றனர்.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் அவசியம்.