புதுவை, ஜூன் 8: பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் புதுவை அமைச்சரவைக்கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டசபையில் உள்ள முதலமைச்சர் அறையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் நாராணசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவை அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச அரிசித் திட்டத்தை தொடர்ந்து வழங்க முடிவு ª எடுக்கப்பட்டுள்ளது