தாம்பரம், ஜூன் 8: நீட் தேர்வில் சென்னைஅனகாப்புத்தூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவி ஜீவிதா 605 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழக பிஜேபி மாநிலத்த லைவர் தமிழிசை செள்ந்தர்ராஜன், படிப்பு செலவிற்கு முன்பணமாக ரூ.50ஆயிரத்தை தனது சேமிப்பில் இருந்து வழங்கினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசு பள்ளியில் படித்த ஜீவிதா 2 முறை நீட் எழுதி 600 மதிபெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். என்றும் அவர் ஒரு முன்னுதாரணம் என்றார். மேலும் அரசியல்வாதிகள் ஏற்படுத்தி வரும் அவநம்பிக்கையை இந்த மாணவி பொய்யாக்கி உள்ளதாக குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி அரசியல் தலைவர்களிடம் கேட்டுக் கொள்வது நீட் உயிரிழப்புகள் ஏற்படும் போது அரசியல் தலைவர்கள் இதுபோன்று நடைபெற கூடாது என்று கூறுவதற்கு பதிலாக தொடர்ந்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கைவிடுக்கும் ஸ்டாலின் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளாதீர்கள் என ஏன் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பிய தமிழிசை எதிர்கட்சிகள் மாணவர்கள் மத்தியில் அவ நம்பிக்கையை விதைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

உயர்கல்வி மருத்துவத்தில் இந்தியாவிலேயே அதிக மாணவர்கள் இருப்பது தமிழகத்தில்தான் 7 பேரில் ஒருவர் தமிழர். இதை உருவாக்கியது நீட். எனவே அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு, ஜீவிதா ஒரு எடுத்துக்காட்டாக அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபித்துள்ளார். சுயலாபம் சுய அரசியலுக்காக அனைத்திலும் அரசியல் செய்கிறார்கள். மாணவர்களே மற்ற மொழியை கற்க விரும்பினாலும் எதிர்கட்சிகள் தடுக்கின்றன எனக் கூறினார்.

மனித சங்கிலி போரட்டத்திற்கு மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, தமிழத்தை குத்தகைக்கு எடுத்தது போல் வைகோ பேசக்கூடாது என்றும் இவருக்கு இருக்கும் அக்கறையைவிட மத்திய அரசுக்கு அதிகம் இருக்கிறது
இந்நிலையில் தமிழகம் பாதிப்பு அடையும் அளவுக்கு எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது எனவும், தமிழக நலனை காக்க பிஜேபி எப்போதும் குரல் கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.