திருத்தணி, ஜூன் 8: அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் இரண் டாவது கட்டமாக திருத்தணி பகுதி யில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளராக திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். ஜெகத்ரட்சகன், இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக திருத்தணி பகுதியில் வாக்காளர்களுக்கு ஜெகத்ரட்சகன் நன்றி தெரிவிக்க திறந்த ஜீப்பில் தனது கட்சியினருடன் வந்து பகுதி மக்களை சந்தித்தார். பின்னர் திருத்தணி நகர முக்கிய வீதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்த தொகுதி மக்களாகிய உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தொகுதிக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.

தொடர்ந்து திருத்தணி ஒன்றியத்தில் உள்ள கேஜி கண்டிகை சின்ன கடம்பூர் மற்றும் பள்ளிப்பட்டு மற்றும் ஆர்கே பேட்டை பகுதிகளில் கிராமங்கள் தோறும்  திறந்த ஜீப்பில் சென்று நிர்வாகி களை சந்தித்து நன்றி கூறியதோடு வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அப்போது திருத்தணி நகர செயலாளர் எம்.பூபதி, நிர்வாகிகள்  வழக்கறிஞர் வி. கிஷோர் மற்றும் வினோத் குமார், ஜீ.எஸ் கணேசன், திருத்தணி ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ஜி. ரவீந்திரா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கட்சி பிரமுகர்கள் திமுக கொடிகளை இருசக்கர வாகனங்களில் கட்டிக் கொண்டு ஊர்வலமாக சென்று இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.