சென்னை, ஜூன் 8: சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவர், நேற்றிரவு ஆற்காடு சாலையில் நடந்துச்சென்றுக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, பைக்கில் வந்த 2 பேர், செல்வராஜின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.  இது குறித்து, செல்வராஜ் அளித்த புகாரின்பேரில், விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மர்மநபர்களை தேடிவருகின்றனர்.