சீனாவை தொடர்ந்து ரஷ்யாவிலும் ரஜினியின் 2.0

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான ‘2.0’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய சாதனை வசூல் செய்தது.

சீன மொழியிலும், ஆங்கில சப் டைட்டிலும் ‘2.0’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி சீனாவில் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாலிவுட் பதிப்பின் டைட்டிலான ‘ரோபோட் 2.0’ என்ற டைட்டிலில்தான் சீனாவிலும் வெளியாகவிருப்பதாக இந்த படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யும் எச்.ஒய் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ஏற்கனவே ரூ.800 கோடி வசூல் செய்த நிலையில், சீன வசூலையும் சேர்த்தால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவை தொடர்ந்து ரஷ்யாவிலும் 2.0 வெளியாக உள்ளது.

செவன்த் சென்ஸ் சினிமேக்ஸ் நிறுவனம் ரஷ்ய மொழியில் இதை பிரமாண்டமாக வெளியிட உள்ளது. சீனா, ரஷ்யா வசூலையும் சேர்த்தால் 1200 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.