வெல்லிங்டன், , ஜூன் 9: நியூசிலாந்து நாட்டின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது.

இதனால் ஏற்பட்ட நில அதிர்வு குயின்ஸ்டவுன் மற்றும் வனாகா ஆகிய பகுதிகளில் நன்றாக உணரப்பட்டது. ஆல்பைன் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

பசிபிக் மற்றும் இந்தோ-ஆஸ்திரேலிய தட்டுகளுக்கு இடையே எல்லையை உருவாக்கும் பகுதியாக ஆல்பைன் உள்ளது. இது நியூசிலாந்திற்கு மிக பெரிய இயற்கை அச்சுறுத்தலில் ஒன்றாக திகழ்கிறது.

ஆல்பைன் பகுதியில் ரிக்டர் அளவில் 8-க்கும் அதிக அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.