500 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்த ரௌடி பேபி

சினிமா

‘மாரி 2’வின் ‘ரௌடி பேபி’ தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்த இடத்தை பிடித்திருக்கிறது. கொரியா, ரஷ்யா மற்றும் தொலைதூர நாடுகளிலும் இந்த பாடல் பரவியிருக்கிறது.

இதுவரை 500 மில்லியன் பார்வைகளை தாண்டி அடுத்த கட்ட சாதனைக்கான வேகமான பாய்ச்சலில் உள்ளது ரௌடி பேபி. பாடலில் வரும் தாள இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் மாயஜாலம், உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது.

இந்த ஆழ்ந்த கூறுகள் தான் ஒரு பாடலின் பிரமாண்ட வெற்றிக்கான மந்திரம். யுவன் ஷங்கர் ராஜா இதில் தனது திறமையை மிகச்சிறப்பாக பல ஆண்டுகளாக நிரூபித்தவர். மேலும் ‘ரௌடி பேபி’ பாடலுக்கு தனுஷின் பாடல் வரிகளும் மின்சாரம் பாய்ச்சியிருக்கிறது. ‘தீ’ உடன் இணைந்து தனுஷ் பாடியதும் பாடலின் கூடுதல் ஈர்ப்புக்கு காரணம்.