சவுத்தாம்டன், ஜூன் 9: ஜாம்பவான் அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா அணி இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இக்கட்டான நிலையில் உள்ளது. இந்நிலையில் அதிரடி வீரர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாளை சவுத்தாம்டனில் மோத உள்ளது.

வெஸ்ட் இண்டீசைப் பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் அபாரமாக ஆடி பாகிஸ்தானை சுருட்டி வென்றது. இரண்டாவது போட்டியில் ஆஸியுடன் கடுமையான போராடி தோற்றது. எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு இந்த போட்டியில் வெல்வது கட்டாயமாக உள்ளது. தோல்வியிலிருந்து மீள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் அந்த அணி உள்ளது.