சேலம், ஜூன் 9: அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோரின் தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் செம்மலை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியில் ஜனநாயகம் நிலவுவதால் தான் ராஜன் செல்லப்பா போன்றவர்கள் கருத்து தெரிவிக்க முடிகிறது என்று அவர் கூறினார்.

பொதுச்செயலாளர் என்பது ஒற்றை மாட்டு வண்டியைப் போன்றது என்று கூறியுள்ள செம்மலை, ஓபிஎஸ், இபிஎஸ் தலைமை இரட்டை மாட்டு வண்டியைப் போன்றது எனத் தெரிவித்துள்ளார்.