சிதம்பரம், ஜூன் 9: சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலை கழக சாஸ்திரிஅரங்கில் பல்கலைக்கழக யோகக்கல்வி மையம் மற்றும் இராஜயோகக்கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையின் கல்விப்பிரிவும் இணைந்து பல்கலைக்கழக ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு மனஇறுக்கமற்ற வாழ்வு என்ற தலைப்பில் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

இதில் 500க்கும் மேற்பட்டட பல்கலைக்கழக ஊழியர்கள் பஙகேற்றனர். இதில் முக்கிய விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார்.
பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் முன்னிலை வகித்தார்.

பல்கலைக்கழக கல்விப்புல முதல்வர் ஞானதேவன், முன்னாள் உளவியல் துறைத்தலைவர் முனைவர் சுரேஷ் சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் பிரம்மாகுமாரிகள் மதுரை துணைமண்டல ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி உமா, பிரம்மாகுமாரிகள் பண்புக்கல்வி நிகழ்வுகளின் இயக்குநர் முனைவர் இராஜயோகி பாண்டியமணி மற்றும் தமிழ் மண்டல கல்விப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் கோமதி ஆகியோர் சிறப்பு தலைப்புரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேசுகையில் பெற்றோர்களும் நண்பர்களும் நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்றும் மனஅழுத்தம் என்பது நாம் புரிந்துகொள்ளும் நிலையைப் பொறுத்து மாறுபடும் மேலும் சிறைக்கைதிகளுக்கு மனஅழுத்த மற்ற நற்பண்புக்கல்வியினை வழங்க பிரம்மாகுமாரிகள் அமைப்பிற்கு வேண்டுகொள்விடுத்தார்.

விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன பேசுகையில்: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விமையம் மற்றும் பிரம்மாகுமாரிகள் கல்விப்பிரிவு இணைந்து நற்பண்புகளுக்கான பட்டயப்படிப்பினை இலவசமாக இந்தியா முழுவதும் உள்ள முக்கியசிறைச்சாலையின் கைதிகளுக்கு நடத்தி வருகின்றது என்று பேசினார்.  மற்றும் விழாவில் பிரம்மாகுமாரிகளின் துணைமண்டல ஒருங்கிணைப்பாளர் உமா மனஇறுக்கத்தை குறைப்பதற்கான தியானவழி முறைகளைக் கூறினார்.