சென்னை ஜூன் 10: குழந்தைப்பருவ புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய கார்ரேலியா மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்தியது.  குழந்தைப்பருவ புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை பரப்பவுவதற்காக ஒருமாத காலம் நீடித்த அகில இந்திய கார் ரேலி ஒன்றை, 1000 படுக்கை வசதிகளுடன் தென் தமிழகத்தில் மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் நடத்தியிருக்கிறது.

எனினும், இந்நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கும் சந்திக்கின்ற குறிக்கோளுடன் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பயணமானது, 10,000 கி.மீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்திருக்கிறது.  மதுரையிலிருந்து தொடங்கி, லடாக் மற்றும் ஸ்ரீநகர் வரை சென்று மீண்டும் மதுரைக்கு திரும்பி வந்த இப்பயணம் 30 நாட்களில், 30 நகரங்களின் வழியாக நடைபெற்றது.

பிரபல விருந்தினர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் முன்னிலையில் இம்மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் அவர்களால் 2019 ஏப்ரல், 27 அன்று மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகத்திலிருந்து இந்த கார் ரேலி, உற்சாகமாக தொடங்கி வைத்தார்.