சென்னை, ஜூன் 10: புற்றுநோயை வெற்றிகொண்ட 150 பேர்கள் பங்குபெற்ற வீப் 2019 என்ற நிகழ்ச்சியை விஎஸ் மருத்துவமனை நடத்தியது. இதில் புற்றுநோயை வென்றவர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களை தெரிவித்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயை எதிர்கொண்டு மருத்துவர்களின் முயற்சியாலும், தங்களின் மனவலிமையினாலும் அதனை வெற்றி கொண்ட சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை விவரித்தனர்.  விஎஸ் மருத்துவமனையின் நிறுவன தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி ஐபிஎஸ்., திரைப்பட நடிகர் ஜான்விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பல்வேறு பின்புலங்களில் இருந்து வரும், புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமான 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

புற்றுநோய் குறித்து பொதுபுத்தியில் இருக்கும் தவறான கட்டுக்கதைகள் தகர்ப்பதுடன், நம்பிக்கை என்ற விதையை தற்போது புற்றுநோய் பாதித்தவர்கள் மனதில் ஆழ்ந்து ஊன்றவும் இந்த நிகழ்வு பெரிவும் உதவியது.