விஜய்சேதுபதியின் மலையாள பட ஃபர்ஸ்ட்லுக்

சினிமா

தமிழில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்சேதுபதி, முதல்முறையாக தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ‘சயிர நரசிம்மரெட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய்சேதுபதி ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் ஜெயராம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார்.

‘மார்கோனி மத்தாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியின் முதல் மலையாள படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அவரது தமிழக, கேரள ரசிகர்கள் ஷெர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

சாஜன் கலாதில் இயக்கி, ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்து வருகிறார். சத்யம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ரேடியோ ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றது. இதனால் இந்த படத்திற்கு ரேடியோவை கண்டுபிடித்த ‘மார்கோனி’யின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.