திருமணம் குறித்து மனம் திறந்த தமன்னா

சினிமா

பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பலரும் திருமணம் செய்து வரும் நிலையில், தமன்னாவும் தனது திருமணம் எப்போது என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. அண்மையில், இவரது நடிப்பில் தேவி 2 படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், பாலிவுட்டில் முன்னணி நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் பிஸியாக இருக்கும் தமன்னாவும் தனது திருமணம் எப்போது என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி தனது 30ஆவது வயதை நிறைவு செய்கிறார் தமன்னா. அப்படியிருக்கும் போது, இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை. அவரது திருமணம் குறித்து அறிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருக்கும் நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில், அவர் கூறியிருப்பதாவது: திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் இல்லை. திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பல விஷயங்கள் பற்றி கவலையில் இருப்பதாகவும், நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடியாமல் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சில வதந்திகளில் சிக்கியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலியுடன் காதலில் இருந்ததாக வதந்தி பரவியது. கோலி மற்றும் தமன்னா இருவரும், செல்கான் செல்போன் விளம்பர நிகழ்ச்சியில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.