சென்னை, ஜூன்,10: அதிமுகவை பொருத்தவரை ஒற்றை தலைமை இருந்தால்தான் அந்த கட்சி நீடிக்கும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்றார்.

ஒரே விமானத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின்,அவரதுமகன் உதயநிதி ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் திருச்சி சென்றனர்.திருச்சிசெல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் சு. திருநாவுக்கரசர் எம்பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருச்சியில் நடைபெறும் அன்பின் பொய்யாமெழியின் சிலை திறப்பு விழா, முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் வாக்களித்து வெற்றிறெ செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட மூன்று விழாக்களில் பங்கேற்க செல்கிறேன்.

அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் நிகரற்ற தலைமையும், ஆளுமை திறன் கொண்ட ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கி வந்த அதிமுக இன்று பல்வேறு கோஷ்டிகளால் திணறி வருகிறது. அதிமுகவை பலரும் மனம்போன போக்கில் பேசி வருகின்றனர். பதவி கேட்பதிலும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதிமுகவில் 3 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். அதற்கும் பலத்த போட்டி நிலவுகிறது. மேலும் அதிமுகவை பொருத்த வரை ஒற்றை தலைமை இருந்தால் தான் அந்த கட்சி நீடிக்கும்.

நீட் தேர்வை பொருத்தவரை தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலை தவிர வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை. நாங்கள் இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ராகுல் தலைமையில் வருகின்ற எதிர்வரும் தேர்தலிலும் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெறும். தமிழகத்தில் இருமொழி கொள்கையே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார்.