சென்னை, ஜூன் 10: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் என். கோவிந்தராஜ் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் என். கோவிந்தராஜ் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தமுற்றோம்.

ஆரம்ப கால அதிமுக நிர்வாகி கோவிந்தராஜி கட்சியின் மீதும், ஜெயலலிதா மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு செங்கம் ஒன்றியம், மேல்செங்கம் கிளைக்கழக செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருவண்ணாமலை மண்டல அண்ணா தொழிற்சங்கச்செயலாளர் முதலான பொறுப்புகளில் பணியாற்றியவர்.

அதிமுக நிர்வாகி கோவிந்தராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற பிராத்திக்கிறோம். இவ்வாறு அவர்கள் இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர்.