மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற திரைப்படத்தை தற்போது திரையிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன், இப்படத்தை, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 5ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, படத்துக்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியது.

இதனையடுத்து இந்த படம் நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த சூழலில், பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.