பாரிஸ், ஜூன் 10: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், 12-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்துமுடிந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 4-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்மை எதிர்கொண்டார்.
3 மணி ஒரு நிமிடம் நீடித்த இந்த விறுவிறுப்பான மோதலில், ரஃபேல் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொம்னிக்கை வீழ்த்தி மீண்டும் வெற்றி வாகை சூடினார்.
இதன்மூலம், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர்கள் பட்டியலில் நடால் (18 முறை) 2-ம் இடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.18 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.