சென்னை, ஜூன் 10: புரோகிதரிடம் ஜூஸ் வாங்கி குடித்துவிட்டு 2 சவரன் நகையை பறித்து சென்றது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 23). புரோகிதரான இவர், கடந்த 5-ம் தேதி ஆழ்வார்ப்பேட்டையிள்ள வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு, தி.நகருக்கு தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, இவரை வழிமறித்த இருவர், எங்கள் வீட்டு விசேஷத்தை நடத்திதரும்படி கேட்டுள்ளனர். இவ்வாறு அவரிடம் பேச்சு கொடுத்து, அவரது செலவிலேயே ஜூஸ் வாங்கி குடித்துவிட்டு, அவரின் கவனத்தை திசை திருப்பி எதிர்பாராத நேரத்தில், புரோகிதர் அணிந்திருந்த 2 சவரன் நகையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, காசிமேட்டை சேர்ந்த பல்சர் பாபு (வயது 35) என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.