செங்குன்றம், ஜூன் 10: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேராசிரியர் சிவ.செல்வகுமாருக்கு கல்வி காவலர் விருதை நீதிபதி கே.என். பாஷா வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நீதிபதி கே.என். பாஷா “தமிழா கேள்” என்ற நூலை வெளியிட்டார்.

பேராசிரியர் சிவ.செல்வகுமாரின் பொதுநல சேவை, கல்வி தொண்டு மற்றும் தமிழ் தொண்டை பாராட்டி அவருக்கு கல்வி காவலர் விருதை வழங்கி தங்க மோதிரம் அணிவித்து நீதிபதி கே.என்.பாஷா பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் டிகேஎஸ் இளங்கோவன் எம்பி, டாக்டர் நா.சந்திரபாபு, சோகா இகேதா மகளிர் கலை கல்லூரியின் தலைவர் சேதுகுமாரன், முனைவர் சபாபதி மோகன், ராமலிங்கம், கவிஞர் குமார ராஜா, முனைவர் கஸ்தூரி ராஜா, வழக்கறிஞர் வீரமர்த்தினி, பாவலர் ராமலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் வெற்றிவேந்தன் நிகழ்ச்சியின் முடிவில் நன்றி கூறினார்.