சென்னை, ஜூன் 10: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர் கற்பகம் (வயது 49). அதே பகுதியை சேர்ந்தவர் மஞ்சு (வயது 26). இவரிடம் கற்பகம் கடந்த ஒரு வருடத்திற்குமுன்னர், ரூ. 40,000 கடன் வாங்கிவிட்டு, பாதி பணத்தை மட்டுமே தந்துள்ளார்.

மீதி பணத்தை கேட்டு, நேற்று கற்பகத்தின் வீட்டிற்கு மஞ்சு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதையடுத்து அது கோஷ்டி மோதலாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக இருவரும் ஆயிரம்விளக்கு போலீசில் அளித்த பரஸ்பர புகாரின்பேரில், மஞ்சு, கற்பகம் உட்பட அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அடிதடியில் இறங்கிய பாண்டியன், செல்வி, ரங்கிளா, அருள்ஜோதி, ஜெனிபர், வீரம்மாள், செல்வி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.