சென்னை, ஜூன் 10: வாகன ஓட்டி ஒருவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியவர்களை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 23). இவர் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். நேற்றிரவு பணிமுடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அமைந்தகரை தனியார் வணிக வளாகம் அருகே சென்றுக்கொண்டிருந்த இவரை அருகில் மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, செல்போனை பறித்து கொண்டு தப்பியோடியது.

இதைபார்த்து அங்கிருந்தவர்கள் பைக்கை துரத்தி சென்று 2 பேரை பிடித்து அமைந்தகரை போலீசில் ஒப்படைத்தனர். பிடிப்பட்டவர்கள் தீபக் குமார், வினோத் குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.