சென்னை, ஜூன் 10: வடபழனியில் பைக் திருட்டின்போது, இலவச இணைப்பாக செல்போன்களையும் சேர்த்து கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்து, 4 பைக்குகள் மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, வடபழனியில் அடிக்கடி பைக்குள் திருடுப்போவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவை கைப்பற்றி ஆய்வு நடத்திவந்தனர். அதனடிப்படையில், 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், விருத்தாசலத்தை சேர்ந்த சிங்காரவேலு, ஜனார்த்தனன் என்பதும், சென்னைக்கு வந்து தங்கியிருந்து. பைக் கொள்ளையில் ஈடுபடும்போது, இலவச இணைப்பாக காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்துவைத்து தூங்குவோரின் வீட்டினுள் நுழைந்து செல்போன்களை திருடிவருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து 4 பைக்குகள், 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.