சவுத்தாம்டன், ஜூன் 10: தென்னாப்பிரிக்கா-விண்டீஸ் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழைக்காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

சவுத்தாம்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் ஸ்கோர் அரைசதம் கடப்பதற்குள் வழக்கம்போல், 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து பறிதவித்து நின்றது. 2.5-வது ஓவரில் தொடக்க வீரர் அம்லா(6), 6.1-வது ஓவரில் ஏய்டன் மார்க்ரம்(5) ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் (17), கேப்டன் டூ பிளெசிஸ்(0) ஆகியோர் விளையாடிவந்தனர். அப்போது, திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

சில மணி நேரத்திலேயே மழை நின்றபோதிலும், மைதானத்தை சுற்றி மழைமேகம் தொடர்ந்து நிலவுவதால் ஆட்டத்தை தொடரமுடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.