மெல்போர்ன், ஜூன் 11: ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா பந்துவீசினார். அப்போது, பெரும்பாலான நேரங்களில் தனது பேண்ட் பாக்கெட்டுகள் கையைவிட்டு பின்னரே பவுலிங்கை தொடங்கினர். ஸம்பாவின் இந்த செயல் அவர் பந்தை சேதப்படுத்தினார் என்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிவிட்டது.

இதுகுறித்து கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில், ஆடம் ஸம்பா தனது பேண்ட் பாக்கெட்டில் ‘ஹேண்ட் வார்மர்’ என்ற பொருளை வைத்துக் கொண்டு, கைகளை சூடாக்கி கொண்டு பின்னர் பந்து வீசுவார். அது தவிர வேறு ஒன்றுமில்லை. அவர் பந்தை சேதப்படுத்தவில்லை. இவ்வாறு, பின்ச் விளக்கம் அளித்துள்ளார்.