சியாங், ஜூன் 11: காணாமல் போன இந்திய விமானப்படையின் உடைந்த உதிரி பாகங்கள் அருணாச்சாலப் பிரதேசத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்-32 என்ற இந்த விமானம் 13 பேருடன் ஜூன் 3-ம் தேதி நடுவானில் காணாமல் போனது. விமானத்தை பற்றிய துப்பு தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் சியாங் மாவட்டத்தில் பயூம் வட்டாரத்தில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடந்ததை விமானப்படையின் ஹெலிகாப்டர் கண்டுப்பிடித்துள்ளது.