51 மாடி கட்டிடம் மீது ஹெலிகாப்டர் மோதி விமானி பலி

உலகம்

நியூயார்க், ஜூன் 11: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 51 மாடி கட்டிடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதி எரிந்து விழுந்ததில் அதிலிருந்த விமானி பலியானார்.
மோசமான வானிலை காரணமாக, தெளிவான பார்வை கிடைக்காததால் ஹெலிகாப்டர் அந்த கட்டிடத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி நடந்த விசாரணையில், ஹெலிகாப்டர் அவசரமாக கட்டிடத்தின் மேற்கூரையில் இறங்க முற்பட்டதால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.
இதில் பயங்கரவாத செயல் எதுவும் இல்லை என நியூயார்க் நகர கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ கூறியுள்ளார். ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் கட்டிடத்தில் இருந்தவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனால் விமானி உயிரிழந்து விட்டார். ஹெலிகாப்டர் மோதியதில் கட்டிடம் குலுங்கியதாகக் கூறப்படுகிறது.