அமிதாப் பச்சன் டுவிட்டரில் புகுந்த ஹேக்கர்ஸ்

இந்தியா

மும்பை, ஜூன் 11: சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் டுவிட்டர் அக்கவுண்ட்டையே ஹேக் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் அமிதாப் பச்சன். அவரது டுவிட்டரை 3 கோடியே 74 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் அவரது டுவிட்டர் அக்கவுண்ட் திடீரென ஹேக் செய்யப்பட்டு, அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் படமும், அந்நாட்டு கொடியும் அதில் இடம் பெற்றுள்ளன.