மும்பையில் கனமழை: சென்னை விமானங்கள் தாமதம்

இந்தியா

மும்பை, ஜூன் 11: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடலில் வாயு புயல் உருவாகியுள்ளது. வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் ஆனது 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதியில் ஜூன் 13-ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

புயலால் மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் இருந்து சென்னை வரும் இரு விமானங்கள் 2 மணி நேரம் காலதாமதத்துடன் வந்து சேருகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.