புதுச்சேரி, ஜூன் 11: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமனின் உடல் அவரது சொந்த ஊரான ஆலத்தூர் கிராமத்தில் அரசு மரியாதையுடன¢ அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஜானகிராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் காலமானார். இதனையடுத்து அவரது உடல் ஆம்பூர் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன். மாநில அமைப்பாளர்கள் சிவக்குமார், சிவா மற்றும் தோழமை கட்சியினர், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் ஜானகிராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமான பொது மக்களும், திமுகவினரும் ஜானகிராமனுக்கு
அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலையில் மரக்காணத்தை அடுத்த ஜானகிராமனின் சொந்த ஊரான ஆலத்தூருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க புதுச்சேரி காவல்துறையினர் அளித்த அரசு மரியாதையுடன் ஜானகிராமனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேர¤முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.ஆர்.கே, பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

ஜானகிராமனின் மறைவையொட்டி புதுச்சேரியில் துக்கம் அனுசரிக்கப் படுகிறது. இதனையொட்டி அங்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும் தமிழகத்திலும், புதுவையிலும் அரைக்கம்பத்தில் பறந்தன.