சென்னை, ஜூன் 11:  ஈவிஆர் சாலையில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த கோவையை சேர்ந்த வாலிபர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் வைத்திய சுப்ரமணி (வயது 42). இவர் தனது தாயாருடன் கடந்த 30-ம் தேதி சென்னைக்கு வந்து ஈவிஆர் சாலையில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக வந்திருப்பதாக கூறிய நிலையில், இன்று காலை சுப்ரமணி விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருவல்லிக்கேணி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மயங்கி நிலையில் இருந்த அவரது தாயாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடன்தொல்லை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக இந்த அறையில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.