செங்குன்றம், ஜூன் 11: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்துவந்ததாக எழுந்த புகாரின்பேரில், 2 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்துவருவதாக புழல் சிறப்பு காவல் படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், செங்குன்றத்தில் உள்ள டீக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது, செங்குன்றம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் ஹான்ஸ் விற்பனை நடந்துவருவது கண்டறியப்பட்டதையடுத்து, கடை உரிமையாளர் கற்பக செல்வம் (வயது 42). மற்றும் ராஜன் (வயது 49) ஆகிய இருவரை செங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 20 முதல் 30 ஹான்ஸ் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.