பிரிஸ்டல், ஜூன் 12:  இலங்கை – வங்கதேசம் அணிகள் இடையே நேற்று நடைபெறவிருந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, தொடர் மழைக்காரணமாக டாஸ் கூட போடாமல் முழுவதுமாக கைவிடப்பட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டம் பிரிஸ்டலில் இந்திய நேரப்படி நேற்று இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கவிருந்தது. இதில், இலங்கை-வங்கதேச அணிகள் மோதவிருந்தன. இந்த நிலையில், தொடர் மழைக்காரணமாக டாஸ் கூட போடமுடியாத சூழல் நிலவிவந்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மழை நீடித்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, மழைக்காரணமாக, இலங்கை-பாகிஸ்தான், விண்டீஸ்-தென்னாப்பிரிக்கா இடையேயான ஆட்டங்கள் கைவிடப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாளை வரை இங்கிலாந்தில் மழை நீடிக்கும் என்று உள்ளூர் வானிலை ஆய்வுமையம் முன்னறிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.