இந்தியா-நியூசிலாந்து பலப்பரீட்சை

TOP-6

நாட்டிங்காம், ஜூன் 12: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள 18-வது லீக் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாட்டிங்காமில் மதியம் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

நடப்பு தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டு 4 புள்ளிகளுடன் இந்திய அணி பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. அதேபோல், நியூசிலாந்து அணியும் தாங்கள் விளையாடிய 3 போட்டிகளில் வெற்றியடைந்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் ஆட்டம் என்பதால் நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், மழைக்குறுக்கீடாமல் இருந்தால் சரி.

இங்கிலாந்தில் நாளை வரை மழை நீடிக்கும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, கவனிக்கத்தக்கது.