திருவள்ளூர், ஜூன் 12: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறபட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் 10 6 2019 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார் .

மேலும் இக்கூட்டத்ற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும் உதவிகளை வழங்கிட கோரியும் மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 80, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 42 மனுக்களும் ,கடன் உதவி கோரி 8 மனுக்களும், குடும்ப அட்டை கோரி எட்டு மனுக்களும், வேலைவாய்ப்பு வழங்க கோரி 30 மனுக்களும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம் சம்பந்தப்பட்ட 12 மனுக்களும், சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக 15 மனுக்களும், மற்றும் ஊரக நகர்புற வளர்ச்சி தொடர்பான 53 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக மொத்தம் 196 மனுக்கள் பெறப்பட்டது.தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார் .