சென்னை, ஜூன் 12: நிகான் இந்தியா நிறுவனம் சென்னையில் புதிய எக்ஸ்பீரியன்ஸ் ஜோனை துவக்கியுள்ளது. அண்ணா நகர் ரவுண்டான அருகில் விஷுவல் பாயிண்ட் 3அவெண்யூ என்ற முகவரியில் இந்த ஜோனை துவக்கியுள்ளது. இதில் அதன் புதிய தயாரிப்புகள், புகைப்படவியல் சமூகத்திற்கு தேவையான அத்தனை பொருட்களும் தனித்துவமாக கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நிகான் மிரர்லென்ஸ் சீரிஸ் டிஎஸ்எல்ஆர் கேமராக்கல், கூல்பிக்ஸ் வகையினம், நிகார் லென்ஸ்கள் தொகுப்பு உதிரிபாகங்கள் மற்றும் ஸ்போட்ஸ் ஆப்டிக்ஸ் வகையினங்கள் உட்பட நிகானின் ஒட்டுமொத்த தயாரிப்புகளும் இங்கு கிடைக்கும்.

இந்த கிளையை அதன் மேலாண் இயக்குனர் சஜன் குமார் திறந்து வைத்தார். இத்திறப்பு விழாவில் பேசிய அவர் நிகான் இந்தியா நாடுமுழுவதும் அதன் புதிய ஜோன்களை திறந்து விரிவுபடுத்தி வருகிறது. இத்தயாரிப்புகளின் டச் மற்றும் டிரை அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது என்றார்.