சென்னை, ஜூன் 12: நடிகர் ராதாரவி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ராதாரவி மீண்டும் அதிமுகவுக்கு வந்ததை, முதல்வர் வரவேற்று வாழ்த்தினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவின் தலைமையை விரும்பாத ராதாரவி, அந்த கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். சென்னையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனால் அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவியின் பேச்சுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.இந்த நிலையில் நடிகர் ராதாரவி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ராதாரவி மீண்டும் அதிமுகவுக்கு வந்ததை, முதல்வர் வரவேற்று வாழ்த்தினார்.